ஒருக்காலத்தில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த தேமுதிக இன்று இருக்கும் இடம் தெரியாமல் உள்ளது. கடந்த சட்டம்னற தேர்தலிலும் மக்களவைத் தேர்தலிலும் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வி அடைந்து தனது அரசியல் வாழ்வின் மோசமானக் காலகட்டத்தில் உள்ளது. இதற்குக் கட்சி விஜயகாந்தின் அதிகாரத்தில் இருந்து அவரது மனைவி மற்றும் மைத்துனரின் அதிகாரத்துக்கு வந்ததும் ஒருக் காரணமாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் ஜெகநாதன் தேமுதிக வில் இருந்து விலகி திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். அவருடன் செயற்குழு, பொதுக்குழு, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திமுக-வில் இணைந்தனர். வரிசையாக தேமுதிக கூடாரம் காலியாகி வருவதால் அக்கட்சி மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளது.