ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

வியாழன், 30 நவம்பர் 2023 (15:56 IST)
வங்கக் கடலில் புயல் உருவாக உள்ளதால் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்  சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் புயல் சின்னம் தோன்றி உள்ள நிலையில் தெற்கு அந்தமான் பகுதியில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று டிசம்பர் மூன்றாம் தேதி புயலாக மாற அதிக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில்  14 மாவட்ட கலெக்டர்களுக்கு இந்த அவசர கடிதம் எழுதப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வங்கக் கடலில் புயல் உருவாக உள்ளதால் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்  சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, டிசம்பர் 3 ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய  மாவட்டங்களிலும்,டிசம்பர் 4 ஆம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் ஆரஞ்சு அலர்ட்  விடுக்கப்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்