"எந்திரன்" படம் தொடர்பான ஆதாரமற்ற குற்றச்சாட்டு ஏற்கனவே நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து, தீர்ப்பும் அளிக்கப்பட்டது. ஆரூர் தமிழ்நாடன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால், நீதிமன்ற தீர்ப்பை நம்பாமல் வெறும் புகார் அடிப்படையில் எனது சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். இது அப்பட்டமான துஷ்பிரயோகத்தை குறிப்பதாக கூறலாம் என்று ஷங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்களது நடவடிக்கையை மறுபரிசீலனை செய்வார்கள் என எதிர்பார்க்கிறேன். ஒருவேளை மறுபரிசீலனை செய்யவில்லை என்றால், அமலாக்கத்துறை உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன்," என ஷங்கர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, "எந்திரன்" படம் தொடர்பான வழக்கு விசாரணை நடந்த நிலையில், அந்த மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இது குறித்த புகாரை விசாரிக்கும் போது தான், அமலாக்கத்துறை ஷங்கர் சொத்துக்களை முடக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.