எடப்பாடி பழனிச்சாமி மூழ்கியதால் நதியின் புண்ணியம் கெட்டுவிட்டது: கலாய்க்கும் தினகரன்!

புதன், 20 செப்டம்பர் 2017 (12:33 IST)
தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட சில அமைச்சர்கள் இன்று மயிலாடுதுறை காவிரி ஆற்றில் மகா புஷ்கரம் விழாவையொட்டி புனித நீராடினர். இதனை டிடிவி தினகரன் கலாய்த்து விமர்சித்துள்ளார்.


 
 
காவிரி ஆற்றின் மயிலாடுதுறை பகுதியில் கடந்த 12-ஆம் தேதி முதல் மகா புஷ்கரம் விழா தொடங்கியது. 144 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறும் விழா என்பதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் அங்கு நீராடி வருகின்றனர்.
 
கடந்த 12-ஆம் தேதி தொடங்கிய மகா புஷ்கரம் விழா வரும் 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட சில அமைச்சர்கள் மயிலாடுதுறை காவிரி ஆற்றில் புனித நீராடினர். இதனையடுத்து முதல்வர் நீராடியது குறித்து தினகரன் விமர்சித்துள்ளார்.
 
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், துரோகத்தை போக்க எந்த நதியில் குளித்தாலும் பாவம் போகாது. பாவம் செய்தவர்கள் நதியில் மூழ்கினால் நதிதான் மாசுபடும் என தினகரன் விமர்சித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்