திடீரென உள்வாங்கிய திருச்செந்தூர் கடல்: பக்தர்கள் அதிர்ச்சி

வியாழன், 31 மார்ச் 2022 (19:46 IST)
திடீரென உள்வாங்கிய திருச்செந்தூர் கடல்: பக்தர்கள் அதிர்ச்சி
திருச்செந்தூரில் திடீரென கடல் உள்வாங்கியதால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
இன்று மாலை திருச்செந்தூர் கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் குவிந்து இருந்த நிலையில் திடீரென கடல் சில அடி தூரத்தில் உருவாகியது இதனால் கடலில் இருந்த பாறைகள் வெளியே தெரிய தொடங்கியது இதனையடுத்து கடற்கரைக்கு வந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து கடற்கரையிலிருந்து விலகினர்.
 
திருச்செந்தூர் கடல் திடீரென வாங்கியதற்கு என்ன காரணம் என்று ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் சுனாமி ஏற்பட்ட போது திருச்செந்தூரில் மட்டும் கடல் உள்வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்