கடந்த 10 வருடங்களாக அதிமுக கூட்டணியில் அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகம் தொடர்ந்து நீடித்து வருகிறது. அதுமட்டும் இன்றி தேவர் சமூகம் சார்ந்த அனைத்து கட்சிகளும், அமைப்புகளும் பெரும் ஆதரவு அளித்தோம்.
ஆனால், இந்த சட்ட சபை தேர்தலில், ஒட்டுமொத்த தேவர் சமுதாய அமைப்புகளுக்கும, கட்சிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இனியும் நாம் ஏமாற வேண்டாம். நம் இன கட்சிகள், தமிழக சட்ட சபைக்குள் காலடி எடுத்துவைக்க வேண்டும். இதற்காக அனைத்து தேவர் இன கட்சிகளுக்கும் அமைப்புகளும் ஒன்றாக ஒரே கூட்டணியில் செயல்படுவது மிக முக்கியமான தருணம் என தெரிவித்துள்ளார்.