வங்கக்கடலில் புயல் சின்னம்.. 3ஆம் எண் கூண்டை ஏற்ற துறைமுகங்களுக்கு அறிவுறுத்தல்..!

Mahendran

திங்கள், 23 டிசம்பர் 2024 (13:37 IST)
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக, தமிழகத்தில் உள்ள முக்கிய துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அருகே வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த சனிக்கிழமை வலுவிழந்தது. அதன் பிறகு, அது மீண்டும் தமிழக நோக்கி சென்னைக்கு கிழக்கே நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், புயல் சின்னம் மீண்டும் தமிழக கடற்கரையை நோக்கி திரும்பும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. இதனால் வட கடலோர மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் சில சமயங்களில் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சென்னை, எண்ணூர், கடலூர், நாகப்பட்டினம், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.


Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்