நகைக்கடனும் தள்ளுபடி... பயிர்க்கடன் தள்ளுபடிக்கான வழிகாட்டு நெறிமுறைகள்!!

சனி, 13 பிப்ரவரி 2021 (07:55 IST)
பயிர்க்கடன் தள்ளுபடிக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது.

 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் விவசாயிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளார் என்பது தெரிந்ததே. இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. 
 
இந்நிலையில், விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடிக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. அவை பின்வருமாறு... 
 
1. வேளாண்மை சாராத விவகாரங்களுக்கு வழங்கப்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படாது. 
 
2. பயிர்க்கடன்களுக்காக மானியம் பெற்றிருந்தால் எஞ்சிய தொகை மட்டுமே தள்ளுபடி செய்யப்படும். 
 
3. குற்ற நடவடிக்கை, நிதிமுறைகேடுகளுக்கு உள்ளானவற்றிற்கு கடன் தள்ளுபடி இல்லை.
 
4. கூட்டுறவு சங்களுக்கு மொத்தம் தள்ளுபடி தொகை வட்டியுடன் தவணைகளில் 5 ஆண்டுகளில் விடுவிக்கப்படும்.
 
5. நபார்டு வங்கிக்குச் செலுத்தப்பட வேண்டிய தொகையை வட்டியுடன் அரசே செலுத்தும்.
 
6. ஒவ்வொரு விவசாயிக்கும் கடன் தள்ளுபடி சான்றிதழ், நிலுவையின்மைச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். 
 
7. தள்ளுபடி செய்ய தகுதியான கடன்களை வசூலிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. 
 
8. கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிகள் புதிய கடன்களைப் பெற தகுதியுடையவர்கள். 
 
9. நிலுவையின்மை சான்று வழங்கியவுடன் அசல் நிலப்பதிவேடு, ஆவணங்கள், நகைகளை திருப்பித் தர வேண்டும். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்