இந்திய கடற்படையின் துப்பாக்கி சூடு: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
வெள்ளி, 21 அக்டோபர் 2022 (20:13 IST)
தமிழக மீனவர் மீது இந்திய கடற்படை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
மயிலாடுதுறை மீனவர் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென இந்திய கடற்படை அவர் மீது துப்பாக்கியால் சுட்டதாக தெரிகிறது
இதனால் காயமடைந்த மீனவரை கடற்படையினரே மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்
இந்த நிலையில் இந்திய கடற்படையின் செயல் வருத்தத்திற்கு உரியது என்றும் இந்திய கடற்படையை இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது மீனவர்களின் நம்பிக்கையின்மையும் பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்துவதாக அமையும் என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
இந்தியக் கடற்படையால் மீனவர் சுடப்பட்ட விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு என்ன பதில் கிடைக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்