குறிப்பாக ஸ்பெயின் நாட்டின் ரொகா, எடிபோன், சிஐஇ ஆகிய நிறுவனங்களை சார்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் இன்று ஆலோசனை செய்கிறார். மேலும் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு முதலமைச்சர் அழைப்பு விடுக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
முன்னதாக நேற்று ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் நிலவும் சாதகமான முதலீட்டு சூழல் குறித்து தெரிவித்தார். மேலும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.