எதிர்க்கட்சிகளை தேர்தல் மூலமாக வெல்லலாமே தவிர விசாரணை ஆணையங்கள் மூலமாக வெல்லக்கூடாது என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், டெல்லி துணை முதல்வர் மணிஷி சிசோடியா கைதை கண்டித்து பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளை மறைமுகமாக கூட இல்லாமல் வெளிப்படையாகவே பாஜக மிரட்டுகிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவின் கைது தன் வசம் இருக்கும் விசாரணை அமைப்புகளை அரசியல் நோக்கத்திற்காக மட்டுமே பாஜக பயன்படுத்துகிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.