சேலம் மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த கல்லூரி மாணவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள காவிரி ஆற்றில் அரசு கலை கல்லூரி மாணவர்கள் சிலர் குளிக்க சென்றனர். அப்போது அவர்களில் நான்கு பேர் நேரில் மூழ்கியுள்ளனர்.
பாண்டியராஜன், மணிகண்டன், மற்றொரு மணிகண்டன், முத்துச்சாமி ஆகிய நால்வரும் நீச்சல் தெரியாத நிலையில் அவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சேலம் மாவட்டம், சங்ககிரி தாலுகா, கல்வடங்கம் கிராமத்தில் ஓடும் காவிரி ஆற்றில் இன்று குளிக்கச் சென்ற தனியார் கல்லூரியில் பயின்று வரும் மாணவர்கள் திரு.மணிகண்டன், த/பெ.மணி (வயது 20), முத்துசாமி, த/பெ.செல்வம் (வயது 20), திரு. மணிகண்டன் (வயது 20) மற்றும் திரு.பாண்டியராஜன் (வயது 20) ஆகியோர் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கிஉயிரிழந்தனர் என்ற வேதனையான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.
உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்