பாலியல் அத்துமீறலில் கல்லூரி முதல்வர்.. சென்னை கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

செவ்வாய், 24 ஜனவரி 2023 (14:26 IST)
பாலியல் அத்துமீறலில் கல்லூரி முதல்வர்.. சென்னை கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கல்லூரி முதல்வர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை நந்தனம் செய்ய உடற்கல்வி கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வரும் கல்லூரி முதல்வரை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும் கல்லூரி கட்டணத் தொகையை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி நந்தனம் ஒ.எம்.சி.ஏ கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ளதாகவும் இதனால் நந்தனம் கல்லூரியின் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையில் கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்