தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் முழுமையான ஊரடங்கு செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. மதுரை, சேலம் மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் இரண்டு நாட்கள் கடும் ஊரடங்கு அமல்படுத்த உள்ள நிலையில், சென்னையில் அடுத்த நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நான்கு நாட்கள் முழு ஊரடங்கு என்பதால் மக்கள் பொருட்களை வாங்க கூடுவர் என்பதால் இன்று மாநகராட்சிகளில் பொருட்கள் வாங்குவதற்கான நேரம் 3 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்களை வாங்கி செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தாலும், அதை காற்றில் பறக்கவிட்டவாறு மக்கள் முட்டு மோதிக் கொண்டு கூட்டமாக பொருட்கள் வாங்குவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகமான மக்கள் கூட்டத்தால் போலீஸாரும் மக்களை அதிக இடங்களில் கட்டுப்படுத்த இயலவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.