இந்நிலையில் இந்த பெருமழை பற்றி வானிலை ஆய்வுமையம் முன்கூட்டியே எச்சரிக்கை செய்யாதது குறித்து விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு விளக்கம் அளித்துள்ள சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குனர் நா புவியரசன் வடதமிழகம் அருகே நிலவிவந்த வளிமண்டல சுழற்சி தமிழக கடற்கரையை நெருங்கும் வாய்ப்பு குறைவாகவே இருந்தது. அதனால் தான் 31 ஆம் தேதி அதிகாலை லேசான் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டது. ஆனால் சிறிது நேரத்திலேயே வானிலையில் மாற்றம் ஏற்பட்டு சென்னையில் மழை கொட்டி தீர்த்தது. இந்த மழை மேகங்கள் அதிக உயரத்தில் இல்லாமல் சுமார் 3 கிமீ உயரத்திலேயே இருந்தன. இதுபோன்ற நிகழ்வுகளை முன்கூட்டியே கணிப்பது கடினம். எனக் கூறியுள்ளார்.