ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி செல்லுமா? சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

புதன், 20 ஜூன் 2018 (13:47 IST)
சென்னை ஆர்கே நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக, அதிமுக என இரண்டு பெரிய திராவிட கட்சிகளை எதிர்த்து குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் தினகரன் வெற்றி பெற்றார். அதிலும் இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் டெபாசிட் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், தினகரன் தனது வெற்றிக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளதாகவும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. எனவே அவரது வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது
 
இந்த மனு மீதான விசாரணை கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை ஐகோர்ட் நீதிபதிகள், 'ஆர்.கே. நகர் தொகுதியில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றது செல்லும் என்று சற்றுமுன்னர் தீர்ப்பளித்தனர். ரூ.30 லட்சம் பிடிபட்டதற்கான குற்றச்சாட்டு இருந்தாலும் டிடிவி தினகரன் மீதான வழக்குகளுக்கு ஆதாரம் இல்லை என்றும், நீதிமன்ற உத்தரவுப்படி வாக்காளர்கள் பட்டியல் சரிபார்க்கப்பட்டே பின்னரே தேர்தல் நடத்தப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். இந்த தீர்ப்பு தினகரனுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்