தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் இருந்து வரும் நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து ஏற்ற இறக்கமாக இருந்து வருகின்றன. ஒரு தெருவில் மூன்றுக்கும் அதிகமானோருக்கு தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டால் அந்த தெரு கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படுகிறது. தற்போது 110 தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதியாக உள்ளன.
இந்நிலையில் தினசரி கொரோனா பாதிப்பு 180 முதல் 220 வரை இருந்து வருகிறது. கொரோனா கண்டறியப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்படுபவர்கள் முறையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதில்லை என்பதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இதனால் இனி கொரோனா தொற்று உறுதியானால் அவர்களை நேரடியாக மருத்துவமனையில் அனுமதிக்கவும், தனிமைப்படுத்திக் கொள்ளும் வசதி சம்பந்தப்பட்டவர் வீட்டில் உள்ளதா என்பதை ஆராய்ந்த பின்னர் அவர்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.