தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் சமீப காலமாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளன. முக்கியமாக தலைநகர் சென்னையில் பாதிப்பு வேகமாக அதிகரித்துள்ளது. அதை தொடர்ந்து தமிழக அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியதுடன், மக்கள் மாஸ்க் அணிவது உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளையும் பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் கொரோனா பரவல் குறித்து பேசியுள்ள தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னையில் கொரோனா பாதிப்புகள் வழக்கத்தை விட குறைந்திருப்பதாகவும், அதேசமயம் மக்கள் மறக்காமல் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.