பொட்டு சுரேஷ் கொலை வழக்கு : குற்றப்பத்திரிக்கை டிச.20 ஆம் தேதி தாக்கல்

வெள்ளி, 4 டிசம்பர் 2015 (11:21 IST)
மதுரையில் நடைபெற்ற, பொட்டு சுரேஷ் கொலை வழக்கில், டிச.20 ஆம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.


 

 
மதுரையில், முக அழகிரியின் ஆதரவாளராக செயல்பட்ட தி.மு.க. பிரமுகர் பொட்டுசுரேஷ் கடந்த 2013 ஆம் ஆண்டு, கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட அட்டாக் பாண்டியை போலீசார் கடந்த செப்டம்பர் மாதம் மும்பையில் கைது செய்தனர். 
 
இந்த வழக்கை சிபிசிஐடி அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் வருகிற டிச. 20 ஆம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதால், கூடுதலாக மதுரை நகர் கடும் குற்றங்கள் புலனாய்வு குழு இன்ஸ்பெக்டர் பெத்தராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.  

வெப்துனியாவைப் படிக்கவும்