கடந்த சில மாதங்களுக்கு முன் காவிரியில் தண்ணீர் விட கோரி கர்நாடக அரசை எதிர்த்து தமிழகம் முழுவதும் பெரும் போராட்டங்கள் வெடித்தது. இந்த போராட்டத்தின் காரணமாகவும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாகவும் காவிரி விஷயத்தில் தமிழகத்திற்கு நீதி கிடைத்தது.
ஆனால் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகளோ, கதவணைகளோ இல்லாததால், கர்நாடக அரசிடம் இருந்து போராடி பெற்ற காவிரி நீர், தற்போது நேரடியாக கடலில் கலந்து வருவதாக விவசாயிகள் வேதனையுடன் கூறி வருகின்றனர்.
இனிவரும் ஆண்டுகளிலாவது, பருவ காலம் தொடங்கும் முன்பே மராமத்து பணிகளை முடிப்பதுடன், கொள்ளிடம் ஆற்றில் 5 இடங்களில் தடுப்பணைகள் அமைக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் பிரதான கோரிக்கையாக உள்ளது.