சமீபத்தில் திமுகவைச் சேர்ந்த தயாநிதி மாறன் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து சர்ச்சையானக் கருத்தை தெரிவித்தது சர்ச்சையைக் கிளப்பியது. இதுகுறித்து திமுகவின் கூட்டணியில் இருக்கும் வி.சி.க தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவிக்காமலே இருந்து வந்தார். இதுகுறித்து திரௌபதி படத்தில் ஓவியராக பணிபுரிந்த சுரேந்திரகுமார் கேள்வி ஒரு இழிவான கார்ட்டூன் வரைந்தார். அதில் திமுகவின் காலை நக்குவது போல திருமாவளவனை சித்தரித்து இருந்தார்.
அது பலரையும் கோபப் படுத்தியது. இது விடுதலை சிறுத்தை கட்சியினரை கோபப்படுத்தியுள்ளது.இது சம்மந்தமாக அளிக்கப்பட்ட புகாரை அடுத்து கார்ட்டூனிஸ்ட் சுரேந்திரன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையானார். இந்நிலையில் இவர் தற்போது அளித்துள்ள நேர்காணல் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு கேள்வியில் ‘தமிழ்நாட்டில் கோயில்களை விட மசூதிகள் மற்றும் தேவாலயம் ஆகியவற்றுக்கு குறைவான மின்கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஒரு செய்தியை பகிர்ந்து இருந்தார். அது குறித்து கேள்வி எழுப்பியபோது, அது பொய்யான செய்தி என்று தெரிந்தும் பரப்பியதாக ஒத்துகொண்டுள்ளார்.