பிரபல கார்ட்டூனிஸ்ட் மதன் அவர்களின் மருமகனும் ‘இந்தியன் 2’விபத்தில் மரணம் அடைந்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும் இந்த விபத்தில் இயக்குனர் ஷங்கர் நூலிழையில் உயிர் தப்பியதாகவும் விபத்து நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு வரை ஷங்கர் அந்த இடத்தில் தான் இருந்ததாகவும் கலை இயக்குனர் வட்டாரங்களில் கூறப்படுகிறது