உயிரை இழக்கும் முன் 45 பயணிகளின் உயிர்களை காப்பாற்றிய அரசு பேருந்து டிரைவர்

ஞாயிறு, 5 நவம்பர் 2017 (11:26 IST)
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தேனிக்கு சென்ற அரசு பேருந்தை ஓட்டி சென்ற டிரைவர் நடுவழியில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் பயணிகளின் உயிர்களை காப்பாற்றும் எண்ணத்தால் பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு உயிரிழந்தார்


 


டிரைவர் சின்னச்சாமி என்பவர் மேட்டுப்பாளையத்தில் இருந்து தேனிக்கு பேருந்தை ஓட்டிச் சென்று கொண்டிருந்தபோது, திருப்பூர் அருகே லேசான நெஞ்சுவலி இருப்பதை உணர்ந்தார். உடனே கண்டக்டரை அழைத்து மிட்டாய் கேட்டாராம். கண்டக்டரிடம் மிட்டாய் இல்லாததால் தொடர்ந்து பேருந்தை டிரைவர் ஓட்டியுள்ளார்.

இந்த நிலையில் திடீரென நெஞ்சுவலி அதிகமாகியதை உணர்ந்த சின்னச்சாமி உடனடியாக ஒரு கையால் நெஞ்சை பிடித்தபடியே இன்னொரு கையால் ஸ்டிரிங்கை பிடித்தவர் பின்னர் ஓரமாக பேருந்தை நிறுத்திவிட்டு பேருந்தின் இருக்கையிலேயே சாய்ந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவருடைய உயிர் ஏற்கனவே பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். தனது உயிர்போகும் நேரத்திலும் பயணிகளின் உயிர்களை காக்கும் வகையில் பேருந்தை ஓரமாக நிறுத்திய டிரைவரின் மேன்மையான குணம் குறித்து அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்