ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்ப எடுத்துச்சென்ற பணத்தை கொள்ளையடித்த வேன் டிரைவர்

வியாழன், 26 அக்டோபர் 2017 (12:42 IST)
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்புவதற்காக எடுத்துச் சென்ற பணத்தை வண்டியின் ஓட்டுநரே கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருக்கும் கனரா வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை நிரப்புவதற்காக கருணாகரன் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் சென்றுள்ளனர். டிரைவர் உதயகுமார், உடன் இருந்த காவலரை, அதிகாரிகள் அழைப்பதாக பொய் சொல்லி அனுப்பியுள்ளார். காவலர் சென்றதும் உதயகுமார் பணத்துடன் இருந்த வேனை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றார்.
 
வேனில் இருந்த 28 லட்சம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளார். பணத்தை ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்பி விட்டு வந்த அதிகாரிகள் மற்றும் காவலர் வாகனம் இல்லாத்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக சென்னை விமான நிலைய காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். 
 
இதையடுத்து காவல்துறையினர் உதயகுமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் உதயகுமார் மீனம்பாக்கம் அருகில் உள்ள கல்லூரி பகுதியில் வாகனத்தை விட்டுச் சென்றது தெரியவந்துள்ளது. தற்போது காவல்துறையினர் உதயகுமரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்