கருப்பு நிறத்தில் கிடந்த 500 ரூபாய் நோட்டுகள்

வெள்ளி, 2 டிசம்பர் 2016 (11:56 IST)
மேட்டூர் அருகே காவிரி கரையோரம் செல்லாத 500 ரூபாய் நோட்டுகள் மூட்டையில் வீசப்பட்டு கிடந்தன. ரூபாய் நோட்டுகள் கருப்பு நிறத்தில் இருந்ததால் அங்கு கூட்டம் திரண்டது.


 

 
நேற்று மேட்டூர் அருகே காவிரி கரையோரம் செல்லாத 500 ரூபாய் நோட்டுகள் மூட்டையில் வீசப்பட்டு கிடந்தன. ரூபாய் நோட்டுகள் அனைத்தும் கருப்பு நிறத்தில் இருந்தது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் சென்று பார்த்தனர். 
 
இதுகுறித்து தகவல் அறித்த காவல்துறையினர் ரூபாய் நோட்டு மூட்டை குறித்து விசாரணை நடத்தினர். ரூபாய் நோட்டுகள் அனைத்தும் யாரும் பயன்படுத்தாத வகையில் அதன் மீது ரசாயனம் ஊற்றப்பட்டு இருந்தது. 
 
கருப்பு பணத்தை பதுக்கி வைத்து இருந்த யாரோ அவற்றை ரசாயனம் ஊற்றி அழித்திருக்கலாம்.அல்லது கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடும் கும்பலை சேர்ந்தவர்கள் ஏற்கனவே தாங்கள் தயாரித்து வைத்திருந்த கள்ள நோட்டுகளை ரசாயனம் ஊற்றி அழித்து இருக்கலாம்.   

வெப்துனியாவைப் படிக்கவும்