இந்நிலையில் திமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்த இருப்பதாக தமிழக பாஜக முன்னால் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் ”திமுக குடியுரிமை சட்டத்தை ஆராய்ந்து எதிர்ப்பு தெரிவித்திருந்தால் அவர்களை நான் பினந்திண்ணி கழுகுகள் என பேசப்போவதில்லை. ஆனால் அவர்கள் குடியுரிமை சட்டம் பற்றி ஆராயவில்லை.
குடியுரிமை சட்டம் இலங்கை தமிழர்களுக்கு எதிரானது என்று மக்களை திமுக திசை திருப்பி விடுகிறது. இலங்கை தமிழர்கள் பற்றி பேச திமுகவிற்கு தகுதி இல்லை. தமிழகத்தின் அழிவு சக்தி திமுக. மாணவர்கள் அவர்களை நம்பி போராட்டம் நடத்தாமல் எங்களுடன் வாருங்கள். திமுகவின் பகல்வேஷத்தை கண்டித்து பாஜக சார்பில் 20ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.