மத்திய அரசு நிர்வாக வசதிக்காக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட போது மத்திய அமைச்சகத்தில் புதிய துறைகள் ஏற்படுத்தப்பட்டது. அப்போது புதிய அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர். அதில் தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகனுக்கு 3 துறைகளில் மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் மத்திய இணை அமைச்சராக இருந்த எல்.முருகன் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வாகிறார்.