பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி நடத்தி வருகிறது. இந்த ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட ஜிஎஸ்டி வரி, Zomoto, swiggy உள்ளிட்ட நிறுவனங்களின் உணவுப் பொருள் செயலிகளையும் இந்த வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மத்திய அரசு Zomoto, swiggy உள்ளிட்ட நிறுவனங்களின் உணவுப் பொருள் செயலிகளையும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்தால் உணவு வழங்கும் செயலி மூலம் செய்யப்படும் ஆர்டர் ஒன்றுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில், ஸ்விகி, சொமோட்டோ ஆகிய நிறுவனங்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பெட்ரோல் , டீசலுக்கும் ஜிஎஸ்டி நடைமுறைக்குள் கொண்டு வர பரிசீலிக்க உள்ளதாகவும் கூறப்பட்ட நிலையில் பெட்ரோல்,டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரும் திட்டமில்லை என ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரும்பு, அலுமினியம்,காப்பர் உள்ளிட்ட உலோகத் தாதுப்பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரி 5 % லிருந்து 18% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.