விரைவில் மக்களவை தேர்தல் வரவுள்ள நிலையில், இதற்காக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், திமுக, அதிமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட மாநில கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து, பாஜகவை வீழ்த்த வேண்டி, காங்கிரஸ், சமாஜ்வாடி, திமுக ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ள நிலையில், சமீபத்தில் காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த பின், நேற்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்தது.
''பகுஜன் சமாஜ் கட்சி வரும் மக்களவை தேர்தலில் தனித்துப் போட்டியிடும். பிற கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி அமைக்கப் போவதாகவும், 3 வது அணி அமைக்கப்போவதாகவும், வெளியான தகவல் அனைத்தும் வதந்திதான் என்று'' தெரிவித்துள்ளார்.