இதனிடையே, ரேஷன் கார்டுகளில் ஆதார் எண்ணை இணைக்க நவ.1 தான் கடைசி நாள் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டதாகவும், ஆதார் எண்ணை சேர்க்காவிட்டால் ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில், ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து முறையான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ரேஷன் கார்டுகளில் ஆதார் எண்ணை இணைக்க எவ்வித காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை எனவும், ஸ்மார்ட் கார்ட் பெற ரேஷன் கார்டுகளில் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் எனவும் தமிழக உணவுத்துறை வலியுறுத்தியுள்ளது.