விஜய் அரசியலுக்கு வருவதை தீய சக்திகள் தடுக்கும்: அண்ணாமலை

செவ்வாய், 20 ஜூன் 2023 (10:28 IST)
விஜய் அரசியலுக்கு வருவதை தீய சக்திகள் தடுக்க முயன்றால் அதனை மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
 
நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர் அரசியலுக்கு வரும் முன்பே தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விஜய் தாராளமாக அரசியலுக்கு வரலாம் என்றும் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைத்தால் தீய சக்திகள் தடுக்க நினைக்க நினைக்கும் என்றும் ஆனால் தமிழக மக்கள் விட மாட்டார்கள் என்றும் தெரிவித்தார். 
 
அப்படி வந்த பிறகு அவருடைய கொள்கைகள் கருத்துக்களை தெரிவிக்கட்டும் என்றும் என்ன செய்யப் போகிறார் தன் கனவு என்ன போன்றவை எல்லாம் சொல்லட்டும் என்றும் பின்பு விரிவாக பேசுவோம் என்றும் தமிழக அரசியலை சுத்தப்படுத்த யார் வந்தாலும் பாஜக வரவேற்கும் என்றும் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்