மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களிடம் ரூ.10 ஆயிரம் பெற்று அவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கியதாக, அப்போதைய தேர்வு கட்டுப்பாடு அதிகாரியும், ஐ.டி.துறை பேராசிரியையுமான உமா உள்ளிட்ட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
லஞ்ச ஒழிப்புத் துறையினர் இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில், பல முக்கியத் தகவல்களை கேகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த முறைகேட்டில் மேலும் 30 பேருக்கு சம்மந்தம் இருப்பதாகவும், அவர்களிடம் விரைவில் விசாரணை நடத்திவிருப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.