என்எல்சியில் பணியாற்றும் தொழிலாளி குடும்பம் நடத்துவதற்கு போதிய சம்பளம் இல்லாததால் தன்னை கருணை கொலை செய்ய கோரி குழந்தைகளுடன் என்எல்சி தலைமை அலுவலகம் முன்பு அமர்ந்ததால் பரபரப்பு!

J.Durai

வெள்ளி, 11 அக்டோபர் 2024 (13:49 IST)
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனம் உள்ளது இதில் சுரங்கம் 1, சுரங்க 1 விரிவாக்கம், சுரங்கம் 2 என மூன்று திறந்தவெளி சுரங்கம் மூலம் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றனர் இங்கு 8000 நிரந்தர தொழிலாளர்கள் 10,000 ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
 
இந்த நிலையில் சுரங்கம் இரண்டில் இன்கோசர்வ் தொழிலாளராக பணியாற்றும் செந்தில்குமார்  தனக்கு குடும்பம் நடத்த போதிய சம்பளம் கிடைக்காததால் சம்பளம் உயர்வு இல்லாததால் குடும்பம் நடத்த சிரமப்படுகிறேன் ஆகையால் என்னையும் என் குழந்தைகளையும் கருணை கொலை செய்து விடுங்கள் என்று கூறி என்எல்சி தலைமை அலுவலகம் முன்பு அமர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 
பின்னர் அங்கு வந்த என்எல்சி அதிகாரிகள் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்