இதேபோல மகேஸ்வரி செருதூர் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற செல்வம், தங்கவேல் உள்ளிட்ட 4 நபர்களை பைபர் படகுகில் வந்த இலங்கையைச் சேர்ந்த தமிழ் பேசக்கூடிய 3 நபர்கள் கத்தியை காட்டி ஜிபிஎஸ்-1, மீன் சுமார் 120 கிலோ, வெள்ளி அரைஞான் கயிறு 1 ஆகியவற்றை பறித்துச் சென்று விட்டதாக, கரை திரும்பிய மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.இதே போல சத்தியசீலன் செருதூர் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 4 மீனவர்களை 2 பைபர் படகுகளில் வந்த இலங்கையைச் சேர்ந்த தமிழ் பேசக்கூடிய ஆறு நபர்கள், தங்களிடம் கத்தியை காட்டி மிரட்டி 250 கிலோ மதிப்புள்ள மீன்பிடி வலை, செல்போன் 1. ஜிபிஎஸ் 1, டீசல் சுமார் 100 லிட்டர் மற்றும் ரேஷன் பொருட்களை பறித்து சென்று விட்டத மொத்தம் நான்கு சம்பவங்கள் இலங்கை கடல் கொள்ளையர்களால் நடத்தப்பட்டுள்ளது.