அருண் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ள ’தல’ அஜித்தின் மகள்

புதன், 4 மார்ச் 2015 (12:23 IST)
என்னை அறிந்தால் படத்தில் அஜித்துடன் நடித்துள்ள அருண் விஜய்க்கு அஜித்தின் மகள் அனோஷ்கா அவரைப் பாராட்டி கடிதம் எழுதியுள்ளார்.
 
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் என்னை அறிந்தால். ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ள இப்படத்தில் அஜித்துடன் நடித்திருந்தார் அருண் விஜய்.
 

 
இந்தப் படத்தில் முதன் முறையாக அருண் விஜய் வில்லன் வேடம் ஏற்று நடித்து இருந்தார். அருண் விஜயின் நடிப்பை ஏராளமானோர் பாராட்டி இருந்தனர். மேலும், அருண் விஜய்க்கு இந்தப் படம் அவரது திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாகவே அமைந்தது என்றே கூறலாம்.
 
இந்நிலையில், அருண் விஜய்யின் நடிப்பைப் பாராட்டி ’தல’ அஜித்தின் 7 வயது மகளான அனோஷ்கா கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் ‘பிரிவியூ ஷோ’ பார்த்துவிட்டு அருண் விஜய்யிடம் அவர் ஒரு கடிதம் எழுதிக்கொடுத்ததாகவும் தெரிகிறது.
 
மேலும் அந்த கடித்தத்தில், ’முதல் முறையாக வில்லன் வேடம் ஏற்று நடித்ததற்கு நன்றி.இந்த படத்தில் நீங்கள் நடித்த காட்சிகளை நான் மிகவும் ரசித்தேன். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் உங்கள் நடிப்பு அற்புதம்.
 
எனது தந்தையுடன் நீங்கள் நடித்ததற்காகவும் நன்றிகள்’ என்று குறிப்பிட்டு எழுதியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்