கும்பகோணத்தை அடுத்த குடவாசல் பகுதிக்கு அருகே நெடுஞ்சேரி ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர் முருகானந்தம். இவர் அதிமுக சார்பாக போட்டியிட்டு ஊராட்சி மன்றத் தேர்தலில் வென்றவர். ஆனால் தேர்தலுக்கு முன்பே இவர் பலரிடம் கடன் வாங்கியிருந்ததாக சொல்லப்படுகிறது. இப்போது கடனை திருப்பக் கொடுக்க முடியாமல் பிரச்சனைகளுக்கு ஆளானதால் பூச்சி மருந்து குடித்து ஆற்றங்கரை ஓரமாக மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.