அதிமுகவில் இன்னொரு விக்கெட் காலி? ஜஸ்ட் மிஸ்சில் எஸ்கேப்
திங்கள், 7 ஜனவரி 2019 (16:39 IST)
பேருந்துகள் மீது கல் வீசி தாக்கிய விவகாரம் தொடர்பாக அமைச்சர் பாலகிருஷ்ணா மீது வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் மீது எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் இருந்தது.
1998 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது பேருந்துகள் மீது கற்களை வீசி சேதப்படுத்தியதாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின மீதான் தீர்ப்பு சற்று முன் வெளியானது.
அதில் பாலகிருஷ்ணா ரெட்டி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 3 ஆண்டுகள் தண்டனை என்பதால் அவரது அமைச்சர் பதவியும் எம்எல்ஏ பொறுப்பும் பறிபோகும்.
ஆனால், பாலகிருஷ்ண ரெட்டி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றை ஏற்ற சிறப்பு நீதிமன்றம், அவரது சிறை தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. எனவே, தனது பதவி பரிபோவதில் இருந்து ஜஸ்ட் மிஸ்சில் ஏஸ்கேப் ஆகியுள்ளார்.