அதிமுகவில் இபிஎஸ் – ஓபிஎஸ் இடையே மோதல் நிலவி வந்த நிலையில் கடந்த ஆண்டு அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமித்ததுடன், ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்த ஓ.பன்னீர்செல்வம் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லாது என உத்தரவிட கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என தீர்ப்பளித்தது. தனி நீதிபதியின் இந்த தீர்ப்பிற்கு எதிராக ஓபிஎஸ் மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீடு இன்று விசாரிக்க இருந்த நிலையில் நேரடியாக இறுதி விசாரணை நடத்துவது குறித்து இரு தரப்பிடமும் ஆலோசிக்கப்பட்டது. நேரடி இறுதி விசாரணைக்கு ஓபிஎஸ் – இபிஎஸ் இரு தரப்பினரும் ஒப்புக் கொண்ட நிலையில், இரு தரப்புகளும் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டின் இறுதி விசாரணை ஏப்ரல் 3ம் தேதி நடைபெற உள்ளது.