சமீபத்தில் சினிமா பிரபலங்களான நமீதா, கௌதமி, குட்டி பத்மினி மற்றும் மதுவந்தி ஆகியோருக்கு மாநில செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. அதன்படி இன்று கமலாலயத்தில் கூடிய பாஜக செயற்குழு கூட்டத்தில் நமீதா பங்கேற்றார்.
இதற்கு முன் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, முதல்முறையாக ஒரு கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கிறேன், பாஜக தலைவர் என்ன சொல்ல போகிறார் என ஆர்வமாக உள்ளது. செயற்குழு கூட்டத்தில் விவசாயிகள் நலன் சார்ந்த கருத்துக்களை தலைவர்களிடம் முன்னெடுத்து வைக்கலாம் என்று திட்டமிட்டுள்ளேன்.