ஒரு வேளை numerology யா இருக்குமோ ? பெயர் மாற்றத்தை கலாய்த்த கஸ்தூரி!

வியாழன், 11 ஜூன் 2020 (17:41 IST)
நடிகை கஸ்தூரி ஊர்களின் பெயர் மாற்றப்பட்டுள்ளதை கலாய்த்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 
 
தமிழகத்தில் பல ஊர்கள் மற்றும் மாவட்டங்கள் பெயர் நல்ல தமிழிலேயே இருந்தாலும் ஆங்கிலத்தில் அதன் சொல்லாடல் சரியான தமிழ் உச்சரிப்பிற்கு நேர்மாறாக உள்ளது. 
 
இந்நிலையில் தமிழில் சொல்லப்படுவது போலவே ஆங்கிலத்திலும் அதன் பெயர்கள் மாற்றப்படுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி ஊர்கள் மற்றும் மாவட்டங்களின் பெயரை இரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் பெயர் பலகைகளிலும் மாற்றப்படும் என கூறப்பட்டுள்ளது.
 
இதனை நடிகை கஸ்தூரி கலாய்த்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, இதுல palavakkam இல்லை, paalavaakka , coimbatore மாத்தி  koyampuththur ஆனா erode மட்டும் erode...  
 
இப்பிடி குழப்பி என்ன லாபம்? டெர்மினஸ், டிரெயின்  ஸ்டேஷன் எல்லாத்துலயும் பேர் மாத்த காண்ட்ராக்ட் எடுக்கறவங்களுக்கும் குடுக்கறவங்களுக்கும் லாபம். 
 
நான்லாம்  இன்னும் மெட்ராஸ் ஊட்டி பம்பாய்  னு  தான் இன்னும் சொல்லிக்கிட்டுருக்கேன். ஒரு வேளை, numerology யா இருக்குமோ ? என பதிவிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்