இதற்காக நடிகர்கள் கமல், விஜய், உதயநிதி, நெப்போலியன் ஆகியோர் ரூ. 1 கோடி வைப்புநிதியாக முன்பு வழங்கினர். நடிகர் சிவகார்த்திகேயன் ரூ. 50 லட்சம் வழங்கினார். இந்நிலையில் இன்று நடிகர் தனுஷ் ரூ. 1 கோடி வழங்கியுள்ளார். இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டது.
புதிய கட்டிடப் பணிகளைத் தொடர்வதற்காக சங்கத்தின் வைப்புநிதியாக ரூ. 1 கோடியை தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பூச்சி முருகன் ஆகியோரிடம் தனுஷ் வழங்கினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.