கள்ளக்காதல் மோகம் காரணமாக பெத்த பிள்ளைகளை கொலை செய்துவிட்டு சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கும் அபிராமியை சக கைதிகள் நச்சரிப்பதாலும், 4 நாட்களாக சாப்பிடாததாலும் சிறையில் அவர் மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.
இந்நிலையில் ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கும் அபிராமி செம அப்செட்டாம். காமம் என் கண்ணை மறைத்து விட்டது, அநியாயமாக குழந்தைகளை கொன்றுவிட்டேனே என நினைத்து அழுது கொண்டே இருக்கிறாராம். இது ஒருபுறம் இருக்க சக கைதிகளும் அவரை சூழ்ந்து கொண்டு, என்ன ஆனது? என்று கதை கேட்கின்றனராம். ஆனால் அபிராமி அவர்களிடம் முகம் கொடுத்து கூட பேசுவதில்லை.
இந்த பிரச்சனைகளின் காரணமாக அபிராமி கடந்த 4 நாட்களாக சாப்பிடாமல், தூங்காமல் தொடர்ந்து அழுது கொண்டே இருக்கிறார். இதனால் அவர் நேற்று மயக்கம் போட்டு விழுந்துள்ளார். தயவு செய்து தன்னை தனிச்சிறையில் அடைக்குமாறு அபிராமி ஜெயிலரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இப்போ புலம்பி என்ன பிரஜோஜனம்..