ஆண்டிப்பட்டி அருகில் உள்ள ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். சொந்தமாக இரண்டு கார்களை வைத்து வாடகைக்கு விட்டு தொழில் நடத்தி வருகிறார். மேலும் ஆண்டிபட்டி ஒன்றிய அதிமுக மாணவர் அணி துணை செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
நேற்று இரவு முழுவதும் சதீஷை காணவில்லை. இந்நிலையில் இன்று காலை அந்த பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் சதீஷ் பாதி எரிந்த நிலையில் பிணமாக கிடப்பதை பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.