திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ஆடி கிருத்திகையை ஒட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் ஜூலை 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அன்றைய தினம் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கருவூலம், சார்நிலை கருவூலங்களில் சில பணியாளர்கள் மட்டும் செயல்படுவார்கள். வங்கிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது.