உல்லாசத்தில் ஊறிபோன மனைவி: கள்ளக்காதலனோடு சேர்ந்து கணவனை கொன்ற கொடூரம்

புதன், 26 டிசம்பர் 2018 (09:40 IST)
திண்டுக்கல்லில் கள்ளக்காதலனோடு சேர்ந்து கணவனை கல்லால் அடித்து கொலை செய்த மனைவியை போலீஸார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் திருக்கூர்ணம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(27). இவருக்கு காயத்ரிதேவி என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளது. மணிகண்டன் கொத்தனாராக வேலை செய்து வந்தார்.
 
மணிகண்டன் அவ்வப்போது வேலை விஷயமாக வெளியூர் செல்வார். இதனை பயன்படுத்திக்கொண்ட காயத்ரி, மணிகண்டனின் நண்பரான கமலக்கண்ணனுடன் தொடர்பில் இருந்துள்ளார். இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர்.
 
இதனையறிந்த மணிகண்டன் மனைவியை கண்டித்துள்ளார். கணவன் உயிரோடு இருந்தால் உல்லாச வாழ்க்கையை தொடர முடியாது என கருதிய காயத்ரி, கள்ளக்காதலன் கமலக்கண்ணனோடு சேர்ந்து கணவனை கொலை செய்ய திட்டமிட்டார்.
 
அதன்படி மணிகண்டனை குடிக்க வைத்துவிட்டு அவர் மீது சரமாரியாக கல் எறிந்து கொலை செய்துள்ளனர் காய்த்ரியும் அவரது கள்ளக்காதலன் கமலக்கண்னனும். இதையடுத்து போலீஸார் தலைமறைவாக இருந்த இருவரையும் கைது செய்தனர். இவர்களின் காமவெறியால் அநியாயம் ஒரு உயிர் பறிபோகி ஒரு குழந்தையின் எதிர்காலமும் கேள்விக்குறியாய் மாறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்