700 அடி பள்ளத்தில் விழுந்த போட்டோகிராபர் உயிருடன் மீட்பு

சனி, 25 ஆகஸ்ட் 2018 (09:33 IST)
700 அடி பள்ளத்தில் விழுந்த கொடைக்கானலை சேர்ந்த புகைப்பட கலைஞர் உயிருடன் மீட்கப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியை சேர்ந்தவர் மணி(24). மணி ஒரு போட்டோகிராபர். மணி டால்பின் நோஸ் என்ற பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளை புகைப்படம் எடுக்கும் வேலை செய்து வருகிறார்.
 
இந்நிலையில் நேற்று மணி ஒரு சுற்றுலா பயணியை போட்டோ எடுத்த போது, பாறையில் இருந்து தவறி 700 அடி பள்ளத்தில் விழுந்தார். உடனடியாக சுற்றுலா பயணிகள் மீட்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
 
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புத் துறையினர், அப்பகுதி மக்களோடு சேர்ந்து 700 அடி பள்ளத்தில் கீழே இறங்கினர். மணி உயிரோடு இருப்பதைக் கண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். 
மணியை மீட்ட மீட்புத் துறையினர், அவரை சிகிச்சைக்காக கொடைக்கானல் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்