வெள்ளத்தில் சிக்கிய நடிகர் பிரித்விராஜின் தாயார் மீட்பு

வெள்ளி, 17 ஆகஸ்ட் 2018 (10:51 IST)
கேரளாவில் பெய்து வரும் கனமழையால் வெள்ளத்தில் சிக்கிய நடிகர் பிரித்விராஜின் தாயார் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் காட்டி வருகிறது.  பலர் தங்களது வீடுகள், உடைமைகள் ஆகியவற்றை இழந்து முகாம்களில் தங்கி வருகின்றனர்.  கேரள மக்களுக்கு உதவும் வகையில், நாடெங்கும் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. 
 
கனமழை மற்றும் நிலச்சரிவின் காரணமாக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இதுவரை 100 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு  மலையாளம், தமிழ் திரையுலக நடிகர்கள் நிவாரண உதவி அளித்துள்ளனர். 
இந்நிலையில் தமிழில் மொழி, காவியத் தலைவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் பிரித்விராஜ் வீட்டில் வெள்ளம் சூழ்ந்தது. இதில் பிரித்வியின் தாயாரும், நடிகையுமான மல்லிகா சுகுமாரன் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார்.அவரை சிலர் பத்திரமாக மீட்டனர்.
 
வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உதவுமாறு மலையாள நடிகர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்