சட்ட விரோதமாக வயலில் வைக்கப்பட்ட மின் வேலி: விவசாயி பரிதாப பலி..!

செவ்வாய், 21 மார்ச் 2023 (10:01 IST)
சட்ட விரோதமாக வயலில் வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 40 வயது விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தென்காசி மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி யானை ஒன்று பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்த காட்சி பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் காட்டுப்பன்றி மான் போன்ற வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்தாமல் இருக்க சட்டவிரோதமாக வயலில் மின்வேலி வைக்கும் நிகழ்வு ஆங்காங்கே நடந்து வருகிறது. 
 
அந்த வகையில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அருணாச்சலபேரி என்ற கிராமத்தில் சட்டவிரோதமாக வயலில் வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி முத்துராஜ் என்பவர் உயிர் இழந்தார்
 
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. சட்ட விரோதமாக மின்வேலி அமைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை அனுப்பப்பட்டு வருகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்