வாரம் ஒரு நாட்டுக்கோழி! லோன் கேட்டு வந்த விவசாயியை ஏமாற்றி கோழியை ருசி பார்த்த மேனேஜர்!

Prasanth Karthick

செவ்வாய், 10 டிசம்பர் 2024 (10:07 IST)

கோழிப்பண்ணை வைக்க லோன் கேட்டு வந்த விவசாயியை ஏமாற்றி வங்கி மேனேஜர் கோழியாக வாங்கி சாப்பிட்ட சம்பவம் சத்தீஸ்கரில் நடந்துள்ளது.

 

 

சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்புரி மாவட்டத்தில் உள்ள மஸ்தூரி பகுதியை சேர்ந்த விவசாயி ரூப்சந்த் மன்கர். கோழிகளை வளர்த்து விற்று வரும் ரூப்சந்த் தனது தொழிலை விரிவாக்கி ஒரு கோழிப்பண்ணை வைக்க ஆசைப்பட்டுள்ளார். இதற்காக மஸ்தூரியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் கிளை ஒன்றில் லோன் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

 

ரூ.12 லட்சம் லோன் கேட்டு ரூப்சந்த் விண்ணப்பித்த நிலையில் அந்த வங்கி மேனேஜர், தனக்கு அதில் 10 சதவீதம் தந்தால் உடனடியாக லோன் தருவதாக கூறியுள்ளார். மேலும் வாரம் ஒருமுறை ரூப்சந்த் வளர்க்கும் கோழிகளில் கொளுத்த கோழியாக பார்த்து வாங்கி ருசி பார்த்துள்ளார். ஆனால் லோன் மட்டும் கொடுத்தப்பாடில்லை.
 

ALSO READ: ஒரே நாளில் 600 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை.. அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!
 

ஒரு சமயத்திற்கு மேல் ரூப்சந்திற்கு வங்கி மேனேஜர் தனக்கு லோன் கொடுக்காமல் ஏமாற்றுவது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்த விவசாயி ரூப்சந்த், வங்கி மேனேஜர் தன்னிடம் வாங்கிய கமிஷன் பணம் மற்றும் கோழிகளுக்கான பணத்தை தராவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் சத்தீஸ்கரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்