உதகையில் உள்ள இரண்டு சர்வதேச பள்ளிகளுக்கு ஈமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னால் சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் அது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வந்தது என்பது இமெயில் அனுப்பப்பட்ட ஐபி முகவரி கண்டுபிடிக்கப்பட்டது என்பதும் தெரிந்தது.
இருப்பினும் குற்றவாளி யார் என்பதை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த நிலையில் சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு வைத்ததன் பரபரப்பு இன்னும் நீங்காத நிலையில் உதகையில் உள்ள இரண்டு சர்வதேச பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து மோப்பநாய் உதவியுடன் மூன்று வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளி வளாகம் முழுவதும் சோதனை நடத்தி வருவதாகவும் இந்த சோதனையில் இதுவரை எந்தவிதமான ஆபத்தான வெடிகுண்டு பொருள்களும் சிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து வழக்கம்போல் இது வெறும் மிரட்டலாக தான் இருக்கும் என்றும் இருப்பினும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீஸ் ஆர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.